Welcome to the Progressive International

Sign up now to receive breaking news and important updates from struggles across the world.We protect your data and never send spam.

நாங்கள் யார்

மாற்று உலகிற்கான ஒரு பொது நோக்கைக் கொண்டிருக்கும் முற்போக்கு சக்திகளை நாங்கள் ஒன்றுபடுத்துகிறோம், அணிதிரட்டுகிறோம், அமைப்பாக்குகிறோம்.

இன்றே உறுப்பினராக இணைந்திடுங்கள்.

எங்கள் நோக்கம்

கீழ்கண்டவற்றை உள்ளடக்கியதாக இருக்கும், நாங்கள் படைக்க விரும்பும் உலகம்:

  • தங்கள் சமூகத்தையும், சமூக நிறுவனங்களையும் வடிவமைத்திடும் அதிகாரம் அனைத்து மக்களிடமும் நிலவும் ஒருஜனநாயகம்.
  • அனைத்து நாடுகளும் ஒடுக்குமுறையற்ற வகையில் தங்களது விதியை கூட்டுறவாக முடிவெடுக்கும் வகையில்காலனியத்திலிருந்து விடுதலை.
  • நம் சமூகங்களின் சமத்துவம் மற்றும் பொது வரலாற்று மரபை நிகர் செய்யும்நியாயத்தை நிலைநாட்டுதல்.
  • சிலரின் நலனிற்கு சேவை செய்வதாக அன்றி பெரும்பான்மையினரின் நலனைக் காக்கும்சமத்துவம்.
  • அனைத்து அடையாளங்களும் சமமான உரிமைகளையும், அங்கீகாரத்தையும் அதிகாரத்தையும் பெற்றிருக்கும்விடுதலை.
  • ஒவ்வொருவரின் போராட்டமும் அனைவருக்குமான போராட்டமாகத் திகழும்ஒற்றுமை.
  • புவிக் கோளத்தின் வரம்புகளை மதிக்கும், முன்னணி சமூகங்களைப் பாதுகாக்கும்பேணும்தகைமை (நிலையான வளர்ச்சி)
  • மனித சமூகத்தையும் அவர்களது வாழ்விடத்தையும் இணைக்கும்சூழலியல்.
  • போரின் வன்முறையை அகற்றுகின்ற நாடுகளின் இராஜீய உறவுகள் மட்டுமே நிலவுகின்றசமாதானம்.
  • வேலையை வழிபடுவதை ஒழித்து அனைத்து வகையான உழைப்பிற்கும் வெகுமதி கிடைக்கும் வகையிலானமுதலாளித்துவத்திற்குப் பிறகான சமுதாயம்.
  • ஏழ்மையை ஒழிக்கும், மிகுதியை பகிரும் வகையிலான எதிர்காலத்தில் முதலீடு செய்யும்வளமை.
  • வேறுபாடுகள் பலமென கருதப்படும்பன்மைத்துவம்.

எங்கள் உறுப்பினர்கள் பற்றிய கையேடுஇங்கே

தொடர்புக்கு

ஏதேனும் கேள்விகளோ, கருத்துகளோ இருப்பின் info@progressive.international என்னும் மின் முகவரிக்கு எழுதவும். எங்களது உறுப்பினர்களில் ஒருவர் உங்களை தொடர்பு கொள்வார்.

Navigated to நாங்கள் யார்